Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக ஆட்சி தானே அப்படி என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் வி பி துரைசாமி அதிரடி கருத்து!

நாமக்கல்லில் பாஜகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும் திமுக அரசு அதற்கு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயல்.

தமிழகத்தில் திமுகவின் ஒரு அணியாக செயல்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாகத் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாஜகவின் கொள்கையை ஏற்றுக் கொண்டு உறுப்பினராக எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதாக தெரிவித்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் பரவுவது வாடிக்கை தான். திமுகவில் கட்சி தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இருக்கின்ற தொடர்பு குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் வி பி துரைசாமி.

ஓட்டு அரசியலுக்காக ஆன்மீகம் தொடர்பாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டிகைகளுக்கும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கட்டும், ஹிந்து மதத்தை பற்றி அவதூறாக பேசிய அவருடைய கட்சியை சார்ந்த ராசா மீது நடவடிக்கை மேற்கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார் வி பி துரைசாமி.

மேலும் அவர் தெரிவித்ததாவது, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவிருக்கிறது அப்போது தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றால் நான் பொறுப்பல்ல என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்த லோக்சபா தேர்தலுடன் இணைந்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவது சற்றேற குறைய உறுதியாகிவிட்டது.

தேர்தல் முடிவடைந்த உடன் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடியும், தமிழக முதல்வராக முதன் முறையாக பாஜகவின் தலைவர் அண்ணாமலையும் பதவி ஏற்பதும் உறுதி என்று தெரிவித்துள்ளார் வி பி துரைசாமி.

Exit mobile version