நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

0
186
#image_title

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”.

வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை . அவர்களது வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் நீர்நிலை பகுதியில் வாழ்வோர் ஏழைகள் , அவர்களை தொல்லை செய்ய வேண்டும் என எங்களுக்கும் ஆசையில்லை .

ஆனால் நீர்நிலை புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு சென்று நிற்க வேண்டிய நிலை ஏற்படும் , அனைத்து நீதிமன்றங்களுமே நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்ற வேண்டும் என்கின்றன .

நீர்நிலைப் புறம்போக்கில் வாழ்வோர் குறித்து கருணை ஒருபக்கம் இருக்கிறது , நீதி ஒருபக்கம் இருக்கிறது.

ஆனால் வேறு வழியில்லை , நீர் நிலை புறம் போக்குகளை அகற்றித்தான் ஆக வேண்டும் என பதிலளித்தார்.