அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்!

0
244

அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்!

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும். பல ஆண்டுகளாக   உயர்த்தாமலே இருந்தனர்.அதேபோல அகவிலைப்படி உயர்த்தி தரக்கோரியும் ஊழியர்கள் பலர் போராட்டம் நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 14 வது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதில் 2019 ஆம் ஆண்டின் படி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர ஊழியர்களுக்கு, மூத்தோர் மற்றும் இளையோர் என்ற விகிதத்தின் அடிப்படையில் ஐந்து சதவீதம் உயர்வு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அமல்படுத்தப்பட்ட ஊதிய உயர்வால் மாதம் ரூம் 10 கோடி அரசாங்கத்திற்கு தேவை என போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. இதனை ஈடுகட்ட மாதத்திற்கு ரூ 3 .40 கோடி ரூபாய் பேருந்துகளின் விளம்பரங்கள் மூலம் வருகிறது என்று தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 6.60 கோடி ரூபாயை பயணிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி பேருந்து முழுவதும் முழுமையான பயணிகளை ஏற்றி சென்று அவர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. போக்குவரத்து கழகம் வெளியிட்ட இந்த உத்தரவை அனைத்து மண்டல மேலார்களும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.