Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம்- அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு!

#image_title

தமிழக ஆளுநர் ரவி பிஜேபியாக இருந்தால் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளலாம். நேற்று பிரதமர் வரும்போது மூஞ்சியை உர்ர்ர் என்று வைத்திருந்தார்.

மேற்கு வங்க ஆளுநருக்கு மக்களவை தலைவர் பதவி கிடைத்தது போல நமக்கு ஒன்று கிடைக்காதா என தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.

– அவை முன்னவர் துரைமுருகன் ஆவேச பேச்சு

தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து பேசினர். அப்போது திமுக சார்பில் எழுந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன்.

சட்டமன்ற விதிகளை எல்லாம் தளர்த்தி தீர்மானத்தைக் கொண்டு வருகிறீர்கள் என அதிமுகவினர் எங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஆனால் சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்ததை அதிமுகவினர் தான்.

சட்டமன்ற விதிகளை தளர்த்தி தான் முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் பாய்ந்தார்கள். அதே சட்டமன்ற விதியை இன்று நாங்கள் தளர்த்தும்போது அதிமுகவினர் பத்தினிகளாக மாறிவிட்டனர் என்று கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

இன்று கனத்த இதயத்தோடு தான் ஆளுநர் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர். கவர்னர் பதவி என்பது தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றிய போதே பிரகடனப் படுத்தி இருக்கிறது. நாங்கள் எல்லாம் ஆளுங்கட்சியாக வருவோம் என தெரியாத காலத்திலேயே ஆளுநர் பதவி நாட்டுக்கு தேவை இல்லை என்று தெரிவித்தது திமுக.

மாநில அரசாங்கங்களை ஆட்டிப்படைப்பதற்காக மத்திய அரசு ஆளுநர்களை ஒரு ஏஜென்டாக நியமிக்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் குழப்பம் ஏற்பட்டதற்கு ஆளுநர்கள் தான் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து ஹிந்து தலையங்கம் எழுதியது. மாநிலங்களின் நிலைமை தெரியாமல் கூறுகெட்ட தனமாக பேசினால் இப்படித்தான் வரும் என தி ஹிந்து எழுதியது. அதைக் கேட்டு திருந்தினாரா? இல்லை.

மேற்கு வங்கத்திலே அங்கிருந்த கவர்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியோடு தொடர்ந்து தகராறு செய்து வந்தார், அதன் விளைவாக அவர் இன்று ராஜ்யசபா தலைவர் ஆகிவிட்டார்.

அதைப் பார்த்து நம் ஆளுநர் ரவிக்கும் ஒரு நப்பாசை, நமக்கும் ஒன்று கிடைக்காதா என்று கடுமையாக ஆளுநரை விமர்சனம் செய்து பேசினார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் ஆர்என் ரவி, ஆளுநர் பதவிக்கு மட்டுமல்ல இந்திய குடிமகனாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். உங்களுக்கு ஒரு கட்சி கொள்கை இருந்தால் ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்.

பழைய மு.க.ஸ்டாலினுக்கும், இப்போது இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, பாதி கலைஞர் ஆகவும் பாதி அண்ணாவாகவும் நம்முடைய முதலமைச்சர் தற்போது திகழ்ந்து வருகிறார். அவரை பார்த்து நானே ஆச்சர்யப்படுகிறேன்.

கடந்த முறை தேனீர் விருந்துக்கு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் சென்றபோது அங்கு இந்திய வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு குறும்படம் போட்டார்கள், அதில் தேசத்திற்காக போராடிய பல்வேறு தலைவர்களுடைய படம் இருந்தது ஆனால் காந்தி உடைய படம் இல்லை.

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் பற்றிய படம் போடுகிறீர்கள், காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?, யார் அப்பன் வீட்டு பணத்தில் அந்த படத்தை போடுகிறீர்கள். அது யாருடைய அப்பன் வீட்டு பணம் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிஜேபியாக இருந்தால் போய் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். இப்படி செயல்படுவது கவர்னருக்கு அழகு அல்ல.

பிரதமர் வரும்போது கவர்னரின் முகத்தை பார்த்தேன் உர் என்று இருந்தது. (அப்படியே செய்து காண்பித்தார் )

அதிமுகவினர் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டியை கல்லை தூக்கி அடித்தார்கள், நாங்கள் அப்படியெல்லாம் அடிக்க மாட்டோம். நாங்கள் அண்ணாவின் தம்பிகள் என்று நீண்ட நேரம் ஆளுநருக்கு எதிராக ஆவேசமாக பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தை திமுக சார்பில் ஒருமனதாக வரவேற்பதாக கூறினார்.

Exit mobile version