Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த நட்சத்திரங்களில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை ஓஹோன்னு இருக்குமா!

if-the-man-and-woman-in-these-stars-get-married-life-will-be-ohonnu

if-the-man-and-woman-in-these-stars-get-married-life-will-be-ohonnu

பொதுவாக திருமணம் செய்வதற்குமுன் ஆண், பெண் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஜாதகப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது அதில் மகிழ்ச்சி, பிள்ளைப்பேறு, சுமூகமான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு செல்ல ராசி, நட்சத்திரம், லக்னங்களே பெரும் பங்கு வகிக்கிறது என்று காலம் காலமாக கூறி வரும் கருத்தாகும். அந்த வகையில், ஒரே நட்சத்திரத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது பற்றியும், எந்தெந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது பற்றியும் இங்கு விரிவாகக் காண்போம்.

பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன் அல்லது மணமகளுடைய நட்சத்திரமாக இருக்கும்போது அவர்களுக்குத் திருமணம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. அதைப்போல் ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் மணமகன் அல்லது மணமகளுடைய நட்சத்திரமாக இருந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்யலாம். ஏனென்றால், இந்த நட்சத்திரங்கள் நல்ல பலன்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று மணமகன் அல்லது மணமகளுக்கு நட்சத்திரமாக இருந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்யலாம். ஏனென்றால், பலன்களை அளிக்கும் வகையில் இருக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள் இவைதான் என்று கூறுகின்றனர். இந்த நட்சத்திரங்களை மணமகன், மணமகள் இருவருமே கொண்டிருந்தால் அவர்களுக்குப் பரிகாரம் செய்து விட்டு திருமணம் செய்து வைக்கலாம்.

மேலும் ஆண்,பெண் இருவரும் ஒரே நட்சத்திரம் மற்றும் ஒரே ராசியாக இருந்தால், இவர்களுக்குத் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், இவர்களுக்குக் கண்டகச் சனி, ஏழரைச் சனி, அஸ்தமத்து சனி, அர்த்தாஷ்டம சனி ஒரே நேரத்தில் வரும்போது துன்பம் நேரிடக்கூடும். அதைப்போல், குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போது துன்பங்களையே ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. கணவருக்கு மோசமான கோச்சார நிலை இருக்கும்போது, அந்த சமயத்தில் மனைவிக்கு சுகமான கோச்சார நிலை இருப்பது அவசியமாகும். அப்போதுதான் ஒருவர் கஷ்டத்தில் இருந்தாலும், மற்றொருவர் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொள்வார். இந்தக் காரணத்தால்தான் ஒரே நட்சத்திரம், ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுவர்.

நட்சத்திரப் பொருத்தம் சரியாக அமைவதற்கு ஒரு சில கோயில்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் திருச்சத்திமுற்றம் என்ற தளத்திற்குச் சென்று வந்தால் பிரச்சனை எல்லாம் பறந்து ஓடிவிடும். இது ஈசனும், உமையும் சேர்ந்திருக்கும் அமைப்புள்ள கோவில் ஆகும். இந்தக் கோயில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்திற்கு அருகே உள்ளது. பிரிந்த தம்பதியினரையும் சேர்த்து வைக்கும் சக்தி இந்தக் கோயிலுக்கு உள்ளதாம். அதைப்போல் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அருளியுள்ள ஈசனையும், கோவிலுக்கு உள்ளே அமைந்திருக்கும் அம்பாள் தவம் இருந்த மாமரத்தையும் தரிசித்தாலும் தம்பதிகளுக்கு சுமுகமான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version