Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பிணிகளை சுற்றி ஏராளமான நம்பிக்கைகளும் மூதுரைகளும் உள்ளன. அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு அசைவு கூடுதலானால் பெண் குழந்தை தான் பிறக்கும் என்ற நம்பிக்கையும் அதில் ஒன்றாகும்.

இந்த நம்பிக்கையை இன்றைய தலைமுறைகள் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள இன்று நவீன கருவிகள் உண்டு. அதனால் இந்த நம்பிக்கைகளை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

பெரிய வயறுமாக மூச்சிரைத்து நடக்கும் கர்ப்பிணிகளுடைய வயிற்றின் அசைவுகளை பாட்டிகள் கவனிப்பதுண்டு. அசைவு கூடுதலாக இருந்தால் பெண் குழந்தை தான் என்று அவர்கள் உறுதியாக கூறுவார்கள்.

இந்த நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக கூறப்பட்டு வந்த போது, இதன் பின்னாலுள்ள ரகசியம் என்னவென்று யாரும் தெரிந்துகொள்ள முற்படவில்லை. பெண் குழந்தையானால் அசைவு கூடுதல் என்று அவர்கள் நம்பினார்கள்.

பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் அசைவுகள் அதிகமாக இருக்கும் என்பதை மருத்துவத் துறையும் ஒப்புக் கொள்கின்றது. பெண் குழந்தையின் இதயத்துடிப்பு ஆண் குழந்தையை விட வேகமாக இருக்கும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது. இதனால் கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தையானால் அசைவும் அதிகமாக இருக்கும்.

Exit mobile version