உலக மக்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக மாற்றும் அளவிற்கு தங்கம், நிக்கல், இரும்பு என அறிய வகை உலோகங்களை கொண்ட விண்கல் நோக்கி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஸைக்கி என்ற சிறிய கோளில் தங்கம் மற்றும் விலை மதிப்பிலாத கற்கள் குவிந்து கிடப்பதாக நாசா கருதுகிறது. இதனால் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான சிறிய கோள்தான் 16சைக்கி (16 Psyche ). ஏனெனில் இதுவரை நாம் பாறைகள், பனிக்கட்டியால் உருவான சிறுகோள்கள் பற்றி கேள்விபட்டுள்ளோம். ஆனால், உலோகத்தால் உருவான சிறிய கோள்தான் இந்த 16 ஸைக்கி.
இதில் எண்ணற்ற தங்கம் உலோகங்கள் மற்றும் விலை உயர்ந்த கனிம வளங்கள் இருப்பதனால் இந்த சிறிய கோள் உலகில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர்களாக மாற்றும் என நாசா கூறுகிறது.
16 சைக்கியில் 10 லட்சம் டாலர் குவாடிரில்லியன் மதிப்புக்கு தங்கமும் வைர வைடூரியங்களும் குவிந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 1952- ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
இந்த 16 சைக்கி விண்கல் சுமார் 226 கிலோ மீட்டர் விட்டமுடையது. செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கோடிக்கணக்கான வருடங்களுக்கு மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருப்பதாக வால் ஸ்டீர்ட் ஆய்வு நிறுவனமான Bernstein ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
16 சைக்கி விண்கல்லை நோக்கி 2022 ஆம் ஆண்டு ராக்கெட்டை அனுப்ப உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மூன்றரை வருடங்கள் பயணம் செய்து அந்த விண்கலம் 2026 – ம் ஆண்டு விண்கல சுற்றுப்பாதையை அடையும் எனக் கூறியுள்ளது.
16 சைக்கி கோளை ஆய்வு செய்ய நாசா ‘Psyche’ spacecraft என்ற பெயரில் விண்கலத்தை தயாரித்து வருகிறது.சுமார் 21 மாதங்கள் சைக்கி கோளை சுற்றி வந்து அந்த விண்கலம் ஆய்வு செய்யும். இந்த விண்கலம் முக்கியமான கடைசி வடிவமைப்பு கட்டத்தை எட்டி விட்டதாக கூறுகின்றனர். அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் ராக்கெட்டை தயார் செய்துள்ளது.
நாசா உலோகத்தை ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என கூறுகிறார்கள்.