Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பொருளாதார அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை போல பேசி வருகிறார் என்றும், அவர்களுடைய ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதுபோல திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி தற்சமயம் தமிழகத்தில் இயங்கிக் கொண்டு இருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல அவர்களுடைய ஆட்சியில் இலவச தொலைக்காட்சி வழங்குவதற்காக கடன் வாங்கினார்கள். ஆனால் நாங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக காலம் வழங்குகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட கிரைண்டர் மற்றும் மிக்ஸியை தமிழக மக்கள் இன்றுவரையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் திமுகவின் ஆட்சியில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி வீணாகிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதேபோல திமுக ஆட்சியில் தொலைக்காட்சி கொடுத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version