சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

0
111

 

பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் சராசரி குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப் பட்டுள்ளது.

வங்கியில் நேராகச் சென்று பணம் எடுப்பவர்களே இது உங்களுக்குத்தான் கவனியுங்கள்.

பிரபல வங்கிகளான Maharashtra Bank, Axis Bank, Kotak Mahindra Bank, RBL Bank ஆகிய வங்கிகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தொகை அதாவது minimum balance வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் பணத்தைத் திரும்பப் பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

1. சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்.

2. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பொழுதும் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது.

3. Bank of Maharashtra வங்கியில் சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸ் ரூ.1500 க்கு பதிலாக ரூ.2000 வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் மாதம் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

4. நீங்கள் பணம் எடுத்தாலும் மற்றும் டெபாசிட் செய்தாலும் மூன்று முறை மட்டுமே இலவசம்.அதற்கு மேல் போனால் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படும்.

டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதற்காகவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மேலும் லாக்கரில் உள்ள வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும் அபராதம் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

5. Kotak Mahindra வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஐந்து பரிவர்த்தனை இலவசமாக தரப்படுகிறது. அதற்குமேல் தாங்கள் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

6. Axis வங்கியில் இதுவரை பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க படாத நிலையில் தற்பொழுது பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.