சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரே எரிச்சலா இருக்கா.. இதை உடனடியாக சரி செய்ய தேன் போதும்!!

0
144
If there is only irritation while urinating.. Honey is enough to fix this immediately!!

மனித உடலை தாக்கும் மிகவும் ஆபத்தான நோய் பாதிப்பு சிறுநீரக பாதை தொற்று.இது பெண்களை பாதிக்கும் நோய்களில் ஒன்று.

சிறுநீரக பாதை தொற்று அறிகுறிகள்:

1)சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு
2)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
3)நுரைத்த சிறுநீர் வெளியேறுதல்
4)குமட்டல்
5)வாந்தி
6)சிறுநீர் துர்நாற்றம்

*எலுமிச்சை சாறு
*தேன்

ஒரு முழு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.பின்னர் சுவைக்காக சிறிது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் சிறுநீரீல் வெளியேறிவிடும்.

*கருப்பு திராட்சை

தினமும் 10 கருப்பு திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் படிந்துள்ள அழுக்குகள்,னாய் கிருமிகள் அனைத்தும் அடித்துக் கொண்டு சிறுநீரில் வெளியேறிவிடும்.

*தண்ணீர்

தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்காமாக்கி கொள்ள வேண்டும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு சிறுநீர் கழிக்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரக பாதையில் உள்ள கிருமிகள் மற்றும் தொற்றுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

சிறுநீர் வந்தால் அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர் பாதையில் நோய் கிருமிகள் உருவாகி பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.உடலுறவிற்கு பிறகு அந்தரங்க பகுதியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் சிறுநீரக பாதையில் தொற்று உருவாகிவிடும்.

*நெல்லிக்காய்
*தேன்

இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடிக்கவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரக பாதை தொற்றுக்கள் நீங்கிவிடும்.