இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் பாதிப்பால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடலில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என இருவகை கொழுப்பு இருக்கிறது.இதில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் மாரைடப்பு,இரத்த கொதிப்பு,பக்கவாதம்,உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிட்டதை எளிதில் கண்டறிய முடியாது.கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிட்டால் கல்லீரல்,இதயம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதித்துவிடும்.
தற்பொழுது மாரடைப்பு யாருக்கு வேண்டுமானலும் வருகிறது.இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால்.வறுத்த உணவுகள்,பொரித்த உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளால் கெட்ட கொழுப்பு கூடுகிறது.
உடலில் உள்ள கொழுப்பு ஒரு மெழுகு தன்மை கொண்டது.உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமானால் தமனிகளில் அடைப்பு ஏற்படும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி கை மற்றும் கால் விரல் நகங்களில் தென்படும் சிலர் அறிகுறிகளை வைத்து கொலஸ்ட்ராலை அறிந்து கொள்ளலாம்.கை மற்றும் கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுதல்.அடிக்கடி மார்பு வலி,நினைவாற்றல் இழப்பு,கால்கள் அடிக்கடி குளிர்ச்சி நிலைக்கு செல்வது,கை நகங்களில் கீழ் கருவளையக் கோடுகள் தென்படுதல்,கால்களில் திடீர் வலி,உயர் இரத்த அழுத்தம் போன்றவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க கொழுப்பு உணவை குறைத்துக் கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.