Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!!

#image_title

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!!

*கட்டிலுக்கு அடியில் பொருட்கள் இருக்கக் கூடாது. கட்டிலில் ட்ரா இருந்தால் அதில் வைக்கலாம். அதேபோல் தரையில் நிரப்பி வைக்கக் கூடாது. இவ்வாறு வீட்டில் பொருட்களை கண்ட இடங்களில் பரப்பி வைத்தால் பணக் கஷ்டம் வரும்.

*வீட்டில் எந்த ஒரு தண்ணீர் குழாயிலும் தண்ணீர் கசியக் கூடாது.

*தென் மேற்கில், வடகிழக்கில் மற்றும் மாடிப் படிக்கட்டுக்குக் கீழ் கழிவறை இருக்கக் கூடாது.
இருந்தால் வாஸ்து ரெமெடீஸ் பொருட்கள் ஏதாவது வாங்கி வைத்து விடுங்கள்.

*கீறல், விரிசல் இருக்கும் கண்ணாடி பீங்கான் பொருட்கள், சாமி படங்கள் இருக்கக் கூடாது.

*ஓடாத கடிகாரங்கள், வேலை செய்யாத எலக்ட்ரானிக் பொருட்கள் அதாவது டி.வி, ஃபேன் போன்றவை கண்டிப்பாக இருக்கக் கூடாது.

*நாம் வாழ முக்கிய ஆகாரமாக திகழும் உணவையும், தண்ணீரையும் ஒருபோதும் வீணாக்கக் கூடாது.

*அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் அதை செய்யமால் இருக்கக் கூடாது. இனிமேல் செய்ய ஆரமிக்கவும்.

*காக்கைக்கு உணவு வைக்கும் போது அது எடுக்காமல் இருப்பதும் இதற்கு காரணம். பித்ருக்கள் ஆசி குறைவு என்று அர்த்தம். அதை சரி செய்ய தயிர் சாதம் காக்கைக்கு வைத்துப் பாருங்கள்.

*உப்பு ஜாடியிலும், அஞ்சறைப் பெட்டியிலும் பொருட்கள் குறைவாக இருக்கக் கூடாது.

*வீட்டில் அரிசி, பருப்பு தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூஜை அறை சுத்தமாக இருக்க வேண்டும். கடவுள் படங்களுக்கு வைத்து காய்ந்து போன பூ, மாலை, எலுமிச்சை உள்ளிட்டவற்றை உடனடியாக நீக்கி விட வேண்டும்.

Exit mobile version