Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீமானுடன் கூட்டணி வைத்தால் கப்பு பிகிலுக்குத்தான்! கமல்பட நடிகை பேச்சு! 

If Vijay partners with Seeman, there will be success - Actress Kasthuri

If Vijay partners with Seeman, there will be success - Actress Kasthuri

சீமானுடன் கூட்டணி வைத்தால் கப்பு பிகிலுக்குத்தான்! கமல்பட நடிகை பேச்சு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசன் அவர்கள் படத்தில் நடித்த நடிகை கஸ்தூரி அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகுவதாகவும் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் நடிகர் விஜய் அவர்கள் அறிவித்திருந்தார். மேலும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
தற்பொழுது கோட் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் கூட்டணி வைத்தால் 2026ம் ஆண்டு கப்பு பிகிலுக்குத்தான் என்று நடிகை கஸ்தூரி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அவர்கள் “நாம் தமிழர் கட்சியை நடத்தி வரும் சீமான் அவர்கள் ஜாதியை விரும்பாத நபர். தன்னுடைய கொள்கைகளுக்காக சீமான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சீமானைப் போலவே நடிகர் விஜய் அவர்களும் ஜாதியை விரும்பாத நபர். இதற்கு எடுத்துக்காட்டு அவருடைய ரசிகர்கள் தான்.
பல்வேறு தரப்பினர் தான் நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருக்கிறார்கள். நடிகர் விஜய்யும் சீமானும் கூட்டணி வைத்தால் ஜாதி அரசியல் என்ற ஒன்று இருக்காது. நடிகர் விஜய் அவர்களின் அம்மாவும் அப்பாவும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நடிகர் விஜய் அவர்களின் மனைவி சங்கீதா ஈழ தமிழினத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக நடிகர் விஜய் அவர்களின் கொள்கையும் வேறாகத்தான் இருக்கும்.
நடிகர் விஜய் அவர்கள் சினிமாவில் நடித்தே நிறைய சம்பாதித்து விட்டார். அவர் அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிச்சியமாக நடிகர் விஜய் அவர்களும் சீமான் அவர்களும் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக ஒரு நல்ல மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இவர்கள் அவ்வாறு கூட்டணி வைத்து வெற்றி பெற்று விட்டால் இவர்களுடைய ஆட்சியில் ஊழல் இருக்காது. அதே போல ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டார்கள். நானும் நடிகர் விஜய் அவர்களின் தீவிர ரசிகை தான். கொரோனா தொற்றுக்கு முன்னர் ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய் அவர்களின் திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்ப்பேன்.
நடிகர் விஜய் அவர்களைப் போலவே சீமான் அவர்களுடைய ஜாதியில்லாத அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரும் இணைந்தால் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
Exit mobile version