மழைக்காலம் மட்டுமின்றி கடும் குளிர்காலத்திலும் கொசுக்கள் நடமாட்டம் மட்டும் குறையாமல் இருக்கிறது.டெங்கு,சிக்கன் குனியா,மலேரியா போன்ற நோய்களை பரப்பிவிடும் கொசுக்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த நமது கடமையாகும்.
கொசுக்களை விரட்டி அடிக்க கொசு பேட்,கெமிக்கல் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை கொண்டு அதன் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
கெமிக்கல் நிறைந்த கொசு விரட்டி வாங்க அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.ஆனால் இயற்கையான பொருட்களை கொண்டு எவ்வித செலவும் இன்றி கொசுக்களை ஓட ஓட விரட்டி அடிக்கலாம்.
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
காபித் தூள் – கால் தேக்கரண்டி
பிரியாணி இலை – ஒன்று
முதலில் ஒரு கிண்ணத்தில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி காபித் தூள் சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்து பிரியாணி இலை ஒன்றை எடுத்து கொண்டு தயாரித்து வைத்துள்ள கலவையை இருபுறமும் பூசி நன்றாக காயவிடவும்.
பின்னர் கொசுக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் பிரியாணி இலையை வைத்து பற்றவைக்கவும்.இதில் இருந்து வரும் புகை கொசு நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல் சாம்பிராணியில் இந்த பிரியாணி இலையை கிள்ளி போட்டு வீடு முழுவதும் புகை மூட்டவும்.எப்படி செய்தாலும் கொசுக்களின் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படும்.இனி கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கொசுக்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.அதேபோல் பேய்மிரட்டியை பற்ற வைத்து புகையை வீடு முழுவதும் பரப்பினால் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.