சொத்தை பல் மீது இந்த பேஸ்டை பூசினால்.. புழுக்கள் துடி துடித்து இறந்துவிடும்!!

0
945
If you apply this paste on the tooth.. the worms will pulsate and die!!

இனிப்பு மற்றும் குளிர்ச்சி நிறைந்த உணவுகளால் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சொத்தையாகிவிடுகிறது.இதனால் பல் வலி,பல் ஈறுகளில் இரத்த கசிவு,வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.

சொத்தைப்பல் வலியை போக்கி பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூப்பர் பேஸ்ட் செய்முறை இதோ.

தேவையான பொருட்கள்:

1)மஞ்சள் தூள் – ஒரு பின்ச்
2)கொய்யா இலை – ஒன்று
3)புகையிலை – ஒரு துண்டு

செய்முறை:

முதலில் ஒரு பிரஷ் கொய்யா இலையை பறித்துக் கொள்ளுங்கள்.கொய்யா இலையை தண்ணீரில் போட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை உரலில் போட்டுக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து ஒரு துண்டு புகையிலையை கொய்யா இலையுடன் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு பின்ச் மஞ்சள் தூள் கலந்து உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள்.இதை பல் சொத்தை துவாரத்தில் வைத்து அழுத்தம் கொடுத்து வாயை மூடிக் கொள்ளவும்.

10 நிமிடங்கள் கழித்து சொத்தை பல் துவாரத்தில் வைத்த உருண்டையை அப்புறப்படுத்தி விடுங்கள்.இவ்வாறு செய்வதால் சொத்தைப்பல்லில் உள்ள புழுக்கள் அனைத்தும் துடி துடித்து இறந்து வெளியேறிவிடும்.

மற்றுமொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

1)வேப்பமர இலை – ஒரு கொத்து
2)வேப்பமர பட்டை பொடி – கால் தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கொத்து வேப்பிலையை தண்ணீரில் அலசி உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைக்கவும்.

பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த வேப்பிலை விழுதை போட்டு கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி வேப்பமர பட்டை பொடி சேர்த்து நன்கு கலந்து ஒரு உருண்டையாக உருட்டி பல் சொத்தை துவாரத்தில் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் புழுக்கள் நீங்கி சொத்தைப்பல் வலி குணமாகும்.

தொடர்ந்து இந்த வைத்தியத்தை செய்து வந்தால் சொத்தைப்பல் உருவாவது தடுக்கப்படும்.