அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்!

0
122
If you are lucky you should not be like this! 6.47 carat diamonds found by a farmer!

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில், பன்னா மாவட்டத்தில், உள்ள நிலங்களை வைரங்களின் நிலமாக கருதப்படுகிறது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அரசாங்கத்தால், மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் சிறு சிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவர்கள் இந்த குவாரிகளில் வைரங்களை தேடலாம்.

அப்போது அவர்களுக்கு வைரம் கிடைக்கும் பட்சத்தில் மாவட்ட சுரங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களது கிடைக்கும் வைரங்களை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை, அரசுக்கு உரிய கட்டணம் மற்றும் வரி போக மீதி தொகையை வைரத்தை எடுத்த நபர்களுக்கு கொடுப்பார்கள். இப்படி ஒரு சட்டம் அங்கு உள்ளது. இதே போல் கிராமத்தில், அரசிடம் குத்தகைக்குப் பெற்ற பலர், இதே வகையில் அங்கு ஒரு வியாபாரி அதை ஏலம் விட்டு அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்தார்.

அவரது பெயர் இதுதான் பிரகாஷ் மஜும்தார். அவர் அகழ்வு பணியில் ஈடுபட்டு இருக்கும் போது, அவருக்கு 6.47 கோடி மதிப்புள்ள உயர்தரமான வைரத்தை தோண்டி எடுத்து இருக்கிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், ஏற்கனவே ஐந்து முறை வைரங்கள்  கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விவசாயி கண்டுபிடித்துள்ள வைரம் அங்கு ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அவருக்கு வழங்கப்படும்.

இந்த வகையில் அந்த விவசாயிக்கு 30 லட்சம் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனக்கு கிடைக்கும் தொகையை தன்னுடன் வேலை செய்த, குவாரி பணியில் நான்கு பேருடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.