ஒரு கிளாஸ் நீரில் இந்த இலையை கொதிக்க வைத்து குடித்தால்.. யூரிக் ஆசிட் அளவை கட்டுப்படும்!!

0
141
If you boil this leaf in a glass of water and drink it.. it controls the uric acid level!!

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.யூரிக் அமில அதிகரிப்பால் சிறுநீரக கல்,சிறுநீரக தொற்று,முடக்குவாதம் போன்றவை ஏற்படும்.பெண்களை காட்டிலும் ஆண்கள் யூரிக் அமிலத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.மதுப்பழக்கம்,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் போன்ற காரணங்களால் இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது.இதை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

1)கொத்தமல்லி தழை
2)தண்ணீர்

முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அடுத்ததாக நறுக்கிய கொத்தமல்லி தழையை அதில் போட்டு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் யூரிக் ஆசிட் அளவு கட்டுப்படும்.

தீர்வு 02:

1)கறிவேப்பிலை
2)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுப்படும்.

தீர்வு 03:

1)சீந்தில் இலை
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு சீந்தில் இலை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு இதை வடித்து காலை மாலை பருகி வந்தால் யூரிக் ஆசிட் லெவல் கண்ட்ரோல் ஆகும்.

தீர்வு 04:

1)துளசி
2)தண்ணீர்

ஒரு கைப்பிடி துளசி இலையை பாத்திரத்தில் போட்டு 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.இந்த துளசி நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் யூரிக் ஆசிட் லெவல் கண்ட்ரோல் ஆகும்.