ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! சேலத்தில் விற்பனை சூடுபிடிக்கின்றது!!

0
101

ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! சேலத்தில் விற்பனை சூடுபிடிக்கின்றது!!

 

தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால் சேலத்தில் ஹெல்மட் வியாபாரி ஒருவர் ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவித்து விற்பனை செய்தது சேலத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தற்பொழுது தக்காளி விலை தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழக அரசு உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தி மக்களின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்து வருகின்றது. தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

தமிழகத்தை தவிர கொல்கத்தா, டெல்லி, மும்பை இன்னும் பிற மாநிதங்களில் தக்காளி கிலோ 100 ரூபாய் முதல்  160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

வடமாநிலங்களில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்ஸ்களை நியமித்தும், இன்சூரன்ஸ் எடுத்து வைத்தும் தக்காளி வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தக்காளியை பயன்படுத்தியதற்காக குடும்பமே இரண்டான சம்பவமும் நடந்துள்ளது.

 

இந்நிலையில் சேலத்தில் ஹெல்மட் வாங்கினால் தக்காளி இலவசம் என்ற அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் முகமது காசிம் என்பவர் ஹெல்மெட் வியாபாரம் செய்து வருகிறார். இந்த ஹெல்மெட் வியாபாரிதான் இந்த அதிரடியான ஆஃபரை அறிவித்துள்ளார். ஹெல்மெட் வியாபாரி முகமது காசிம் அவர்கள்  “ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்” என்ற அறிவிப்பை பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் அவர்களை வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

ரூபாய் 349 மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்த அதிரடியான ஆஃபர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த ஆஃபர் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தான் இருக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.