இன்று பலரது வீட்டு சமையலறையில் நான் ஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே காண முடிகிறது.நான் ஸ்டிக் பாத்திரங்களில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சமைக்க முடியும் என்பதால் பலரும் இதை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறர்கள்.ஆனால் அலுமினிய பாத்திரங்களை விட நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
நான் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்க பெர்ப்ளூரோ ஆக்டனாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.இந்த அமிலம் உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் தன்மை கொண்டவையாகும்.நான் ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் சூடாக்கினால் அதிலிருந்து நச்சுப் புகைகள் வெளியேறி நோய்களை உண்டாக்கிவிடும்.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பு ஏற்படும்.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கபட்ட உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைகளை சுவாசித்து வந்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதித்துவிடும்.
ஒருவர் நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவருக்கு எலும்பு தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நான் ஸ்டிக் உணவுகள் எலும்பின் ஆரோக்கியத்தை குறைத்து விரைவில் எலும்பு முறிவை உண்டாக்கிவிடும்.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்ந்து ஆபத்தை உண்டாக்கும்.நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை ஏற்படுத்திவிடும்.கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.