Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இன்றைய காலகட்டத்தில் சளி பாதிப்பு என்பது மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது சளி பாதிப்பு ஏற்படும்.இதனால் அடிக்கடி மூக்கடைப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

இரவு நேரத்தில் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் தூங்குவதில் சிரமம் உண்டாகும்.இயற்கை வைத்தியத்தை செய்து இந்த சளி தொந்தரவில் இருந்து முழுமையாக மீளுங்கள்.

நுரையீரல் சளி உருவாக காரணம்:

*காலநிலை மாற்றம்
*இனிப்பு உணவுகள் உட்கொள்ளல்
*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்

நுரையீல் சளியால் ஏற்படும் பாதிப்புகள்:

*சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்
*மூக்கடைப்பு
*நெஞ்சு எரிச்சல்
*இருமல்
*தொண்டை கரகரப்பு

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை (காம்பு நீக்கப்பட்டது) – ஒன்று
2)கற்பூரவள்ளி தழை – இரண்டு

செய்முறை விளக்கம்:-

ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டு கற்பூரவள்ளி தழையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

இதற்கு அடுத்து பிழிந்து வைத்துள்ள வெற்றிலை சாறு மற்றும் கற்பூரவள்ளி சாறை அதில் ஊற்றி இளஞ்சூட்டில் பருகுங்கள்.

இவ்வாறு செய்தால் நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியில் வந்துவிடும்.இந்த பானத்தில் மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டால் மார்பில் சளி கட்டுவது கட்டுப்படும்.

கற்பூரவள்ளி இலையை அரைத்து தேன் சேர்த்து தினமும் மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி,நெஞ்சு சளி,சுவாசப் பிரச்சனை நீங்கும்.

தினம் ஒரு கிளாஸ் வெற்றிலை கசாயம் பருகி வந்தால் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.அதேபோல் வெந்நீரில் தேன் மற்றும் துளசி சாறு சேர்த்து பருகி வந்தால் நீண்ட நாள் சளி தொந்தரவு நீங்கும்.மிளகை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் நுரையீரல் சளி உருகி மலத்துடன் வந்துவிடும்.மூலிகை பொருட்களை கொண்டு கசாயம் செய்து பருகி வந்தால் சளி பாதிப்பு குணமாகும்.தொடர்ந்து வெந்நீர் பருகி வந்தால் நுரையீரல் சளி பாதிப்பு குணமாகும்.

Exit mobile version