இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க இத பண்ண மாட்டீங்க!! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!!
இடம் உங்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டாள் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? கட்டாயம் அனைவருமே 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தான் சொல்வீர்கள். ஆனால் அது உண்மை கிடையாது. நாம் வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்து நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்ற அறிவியல் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.
உதாரணமாக நீங்கள் வெப்பத் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அதற்கு ஏற்றது போல அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். மேலும் நீங்கள் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் நபராக இருந்தால் தண்ணீர் குறைவாக குடிக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் இந்த சூழ்நிலை கால மாற்றத்திற்கு மட்டும் அல்ல ஒருவரின் வயது மற்றும் அவரின் உடல் எடை குறித்து மாறுபடும் என்று அறிவியல் பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இதைக்குறித்து வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் கூறுவது பெண்கள் ஒரு நாளைக்கு 2.7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். மேலும் ஆணாக இருந்தால் 3.7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். இந்த புள்ளி கணக்கில் தண்ணீர் மட்டுமின்றி நாம் அன்றாட வாழ்வில் பருகும் டீ, காபி, ஜூஸ் போன்ற திரவ பொருட்களும் உள்ளடங்கும். மேலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் கிட்னி பிரச்சனை கூட உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் நீர் சத்து குறைந்தால் மூளை பாதிப்பு ஏற்படும் மற்றும் தலைவலியை உண்டாக்கும் என்றும் கூறுகின்றனர். இதிலும் குறிப்பாக உணவு உட்கொள்ளும் சமயத்தில் தண்ணீர் பருகுதல் முக்கியமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி ஆரோக்கியமாகா வாழுங்கள்