Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

50 வயதிலும் 30 வயது போல் தோற்றம் பெற இந்த 3 டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

நம் முன்னோர்கள் காலத்தில் 50,60 வயதை கடந்தவர்கள் தான் சரும சுருக்கங்களை சந்தித்தனர்.ஆனால் இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே சரும சுருக்கங்கள் ஏற்படுவதோடு வயதான தோற்றத்தை அடைந்து விடுகின்றோம்.

இன்றைய காலத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு எளிதில் முதுமை எட்டி பார்க்க தொடங்கிவிடுகிறது.சிலருக்கு உடல் நல குறைவால் முதுமை தோற்றம் ஏற்படுகிறது.சிலருக்கு அதிகப்படியான இரசாயன அழகு சாதன பொருட்களால் சருமம் வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறது.

தற்பொழுது 30 வயதை கடந்த பிறகு இளமை தோற்றத்தை பராமரிப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.அப்படி இருக்கையில் நீண்ட வருடங்கள் இளமையாக வாழ சில விஷயங்களை நாம் மறக்காமல் செய்ய வேண்டியது முக்கியம்.

முன்பெல்லாம் 60 வயதை கடந்தவர்களுக்கு கூட 40 வயது நபருடைய எனர்ஜி இருந்தது.தற்பொழுது இளம் வயதினரால் சிறு வேலைகளை செய்வதில் கூட கடினம் ஏற்படுகிறது.முதுமையை முழுமையாக ஒதுக்கி வைக்க முடியாது தான்.இருப்பினும் இளம் வயதில் முதுமையை சந்திக்காமல் இருக்க நாம் சில விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

உடற்பயிற்சி

முதலில் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் முதுமையை நீண்ட காலத்திற்கு தள்ளிப்போட முடியும்.தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.மனதை ஆரோக்கியமாக வைக்க யோகா செய்ய வேண்டும்.நடைபயிற்சி செய்யலாம்.காலை நேரத்தில் சர்க்கரை பானங்களை தவிர்த்துவிட்டு வெறும் தண்ணீர் மட்டும் உடற்பயிற்சிக்கு பின்னர் அதாவது 15 நிமிடங்கள் ,கழித்து பருக வேண்டும்.

வைட்டமின் சி சத்து உணவுகள்

காலை நேரத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்வது நல்லது.எலுமிச்சை சாறு,நெல்லிக்காய் சாறு,ஆரஞ்சு பழச் சாறு பருகலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து நமது சருமத்தை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நல்ல தூக்கம்

நாம் நன்றாக உறங்கினால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்கும்.நல்ல உறக்கம் இருந்தால் தான் மன அழுத்தம் மற்றும் உடல் நலக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.எனவே தினமும் 8 முதல் 10 மணி நேரம் உறங்க வேண்டும்.இதுபோன்ற ஆரோக்கியமான விஷயங்களை செய்து வந்தால் நீண்ட வருடங்கள் இளமையாக இருக்கலாம்.

Exit mobile version