உடலுறவிற்கு முன் இதை செய்தால்.. விரைவில் உச்சக்கட்டம் அடைவதை தள்ளிப் போடலாம்!!

0
311
If you do this before sex.. you can delay climaxing sooner!!

பெரும்பாலான தம்பதிகள் உடலுறவின் போது சீக்கிரம் உட்சத்தை எட்டிவிடுகிறார்கள்.இதனால் அவர்களின் பாலியல் உறவில் சிக்கல் ஏற்படுகிறது.உடல் சோர்வு,பாலியல் உணர்வு கட்டுப்படுத்த முடியாமை,இளம் வயது உடலுறவு போன்ற காரணங்களால் விரைவில் உச்சக்கட்டம் அடைய நேரிடுகிறது.

நீங்கள் உடலுறவில் ஈடுபடும் பொழுது உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.விந்து வெளியேறுவதை உணர்ந்தால் நீங்கள் சிறிது நேரம் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.30 வினாடிகள் கழித்து உடலுறவு கொண்டால் நீண்ட நேரம் விந்து வராமல் இருக்கும்.

அதேபோல் விரைவில் உச்சக்கட்டம் அடையாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள ட்ரிங்க்ஸ் செய்து பருகலாம்.

TIPS 01

தேவையான பொருட்கள்:

1)செவ்வாழைப்பழம்
2)பால்
3)தேன்

பயன்படுத்தும் முறை:

ஒரு செவ்வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் சேர்த்து உடலுறவிற்கு முன் பருக வேண்டும்.இவ்வாறு செய்தால் சோர்வின்றி வெகு நேரம் உடலுறவு செய்யலாம்.அது மட்டுமின்றி விரைவில் விந்து வெளியேறுவதை இந்த பானம் கட்டுப்படுத்துகிறது.

TIPS 02

தேவையான பொருட்கள்:

1)பிஸ்தா
2)பசும் பால்
3)பனங்கற்கண்டு

பயன்படுத்தும் முறை:

கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பிஸ்தா போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் ஊறவைத்த பிஸ்தாவை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கப் பசும் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு பிஸ்தா பேஸ்டை பாலில் சேர்க்க வேண்டும்.இதனோடு தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருக வேண்டும்.இவ்வாறு செய்வதால் உடலுறவின் போது விரைவில் உச்சக்கட்டம் அடைவது தடுக்கப்படும்.