இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!!

0
179
#image_title

இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!!

இன்றைய காலத்தில் சளி, காய்ச்சல் வருவது எளிதாகி விட்டது. இந்த தொற்று பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இதற்கு துளசி, தூதுவளை வேக வைத்த தண்ணீரை வைத்து ரசம் செய்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*துளசி மற்றும் தூதுவளை வேக வைத்த தண்ணீர் – 1 கப்

*பூண்டு – 5 பல்

*வர மிளகாய் – 3

*புளி – 1 நெல்லிக்காய் அளவு

*சீரகம் – 2 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

செய்முறை…

முதலில் மிளகு, சீரகம், பூண்டு, வர மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் எடுத்து வைத்துள்ள புளி கரைசல், தக்காளியை பிழிந்து கொள்ளவும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லி இலைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு, வரமிளகாய் சேர்த்து பொரிய விடவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை அதில் சேர்த்துக் கொள்ளவும். அவை சூடானதும் துளசி, தூதுவளை வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும். இதை 1 கிளாஸ் பருகினால் சளி, இருமல், காய்ச்சல் சில மணி நேரத்தில் குணமாகிவிடும்.