அதிகாலை நேரத்தில் இதை செய்தால் மலக் குடலில் ஒரு துளி மலம் கூட இருக்காது!!
மலக் குடலில் தேங்கியுள்ள உணவுக் கழிவுகளை முறையாக வெளியேற்றவில்லை என்றால் அவை உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.எனவே குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மலக் கழிவுகளை இயற்கை வைத்தியம் மூலம் வெளியேற்றுவது நல்லது.
தேவையான பொருட்கள்:-
1)வேப்ப இலை
2)தண்ணீர்
3)ஆமணக்கு எண்ணெய்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 வேப்பிலையை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டவும்.
பின்னர் 2 அல்லது 3 துளி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.இந்த நீரை காலையில் எழுந்த உடன் பருகினால் அடுத்த 1 மணி நேரத்தில் மலக் குடலில் தேங்கி கிடந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்ப இலை
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் சிறிது வேப்பிலை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் குடலில் தேவையற்ற கழிவுகள் சேர்வது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
3)கல் உப்பு
4)ஆமணக்கு எண்ணெய்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.ஒரு நிமிடம் கழித்து இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,சிறிது கல் உப்பு மற்றும் 3 துளி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலக்கி குடிக்கவும்.
இதை காலையில் எழுந்த உடன் செய்து குடிக்கவும்.இவ்வாறு செய்வதினால் குடலில் கழிவுகள் தேங்குவது தடுக்கப்படும்.