Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதனை 48 நாட்கள் செய்தால் வெரிகோஸ் வெயினை வீட்டிலிருந்து சரி செய்யலாம்!! 

#image_title

இதனை 48 நாட்கள் செய்தால் வெரிகோஸ் வெயினை வீட்டிலிருந்து சரி செய்யலாம்!!

 

வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படும் நரம்பு சுற்றல் நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் இந்த பதிவில் அற்புதமான எளிய வீட்டு முறை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

 

* ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து வெரிகோஸ் வெயின் இருக்கும் இடங்களில் நன்கு தேய்த்து விடவும். பிறகு மறுநாள் காலையில் சுடு தண்ணீரை பயன்படுத்தி அந்த இடத்தை கழுவினால் வெரிகோஸ் வெயின் நோய் சிறிது சிறிதாக சரியாகத் தொடங்கும்.

 

* வெற்றிலையை எடுத்து அரைத்து அதிலிருந்து 100 மிலி அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது பனங்கருப்பட்டி சேர்க்க வேண்டும். சிறிது கொதித்த பிறகு இறக்கிவிடவும். இறக்கிய பிறகு இதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் கலந்து மூன்று வேலைகளிலும் அதாவது காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளிலும் குடித்து வந்தால் வெரிகோஸ் வெயின் நோய் குணமடைய தொடங்கும்.

 

* கரியபவளத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதில் எலுமிச்சம்பழத்தை சேர்த்து அதை எடுத்து வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் வெரிகோஸ் வெயின் நோய் குறையத் தொடங்கும்.

 

* எண்ணெய்யை பயன்படுத்தி காலில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். காலில் நன்கு மசாஜ் செய்வதாலும் வெரிகோஸ் வெயின் நோய் குறையும்.

 

* பாலில் கருப்பு எள்ளை போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையை எடுத்து வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் தேய்த்து நன்கு காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு இதை சுடு தண்ணீர் பயன்படுத்தி கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் வெரிகோஸ் வெயின் நோய் படிப்படியாக குறையத் தொடங்கும்.

 

* பிறகு சுடு தண்ணீரால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வெரிகோஸ் வெயின் இருக்கும் இடத்தில் சுடு தண்ணீரால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வெரிகோஸ் வெயின் நோயை

சரி செய்யலாம்.

Exit mobile version