Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!

if-you-do-this-for-no-reason-the-penalty-will-be-3-months-in-jail-severe-warning-issued-by-southern-railway

if-you-do-this-for-no-reason-the-penalty-will-be-3-months-in-jail-severe-warning-issued-by-southern-railway

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!

முறையான காரணம் இல்லாமல் ரயிலில் இதை செய்தால் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலானது சூலூர் பேட்டை- அக்கம் பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதிகாலை சுமார் 4:00 மணி அளவில் முன்பதிவு இல்லா பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்துள்ளார். இதன் காரணமாக ரெயில் பாலத்தின் நடுவிலேயே ரயில் நிறுத்தப்பட்டது.

ரயில் பாலத்தின் நடுவில் நின்றதால் குறிப்பிட்ட ரயில் பெட்டிக்கு என்ஜினில் இருந்து செல்ல முடியாமல் ஓட்டுநர் சிரமப்பட்டார். மேலும் அபாய சங்கலியை சரி செய்ய குறிப்பிட்ட அந்த பெட்டிக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது பற்றி  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்களாலும் பாலத்தின் மேல் செல்ல முடியவில்லை.

இதை எடுத்து அங்கு ஆற்றுப்படுகையில் சீரமைப்பு பணியை  செய்து கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரயில் பெட்டிக்குள் நுழைந்த ரயில்வே போலீசார் அபாய சங்கிலியை சரி செய்தனர். இந்த சம்பவத்தினால்  சிறிதுநேர தாமதத்திற்கு பின்னர் ரயில் கிளம்பி சென்றது. மேலும் பயணிகள் சரியான காரணம் இல்லாமல் அபாய சங்கிலியை பயன்படுத்தக் கூடாது  என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

அபாய சங்கிலி மற்றும் ரயில்களில் வழங்கப்பட்டுள்ள வசதியை தவறாக பயன்படுத்துவது விதிகளின்படி குற்றச் செயலாகும். ஏதேனும் அவசரத் தேவை இல்லாமல் ரயில் சங்கிலியை இழுத்தால் ரயில்வே விதிகளில் உள்ள  சட்டத்தின் 141-வது பிரிவின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதியின்படி போதுமான காரணம் இல்லாமல் ஒரு பயணி அபாய சங்கிலியை  இழுத்தால்  அவருக்கு  ஐந்து ஆயிரம் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version