Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

#image_title

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

மாதம் ஒருமுறை வரக் கூடியது அமாவாசை. இந்த நாளில் அனைவரும் தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் இந்த நாளில் திருஷ்டி கழிப்பார்கள்.

கண் திருஷ்டி என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. இவை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அவரின் நிம்மதி, மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போய்விடும்.

அதுமட்டும் இன்றி தொட்டது எல்லாம் தோல்வியில் முடிந்து விடும். இதனால் அதிக எதிர்மறை எண்ணங்கள் தங்களை சுற்றி உருவாகும்.

இந்த கண் திருஷ்டி காணாமல் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். இதற்கு முதலில் ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை நான்காக நறுக்கவும். முழுமையாக நறுக்காமல் பாதியாக நறுக்கவும்.

அதன் நடுவில் குங்குமம், சிறிது கடுகு, 3 வர மிளகாய் வைத்து விடவும். வீட்டில் உள்ள நபர்களை கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து வீட்டில் மூத்தவர்கள் தங்கள் கையில் அந்த எலுமிச்சம் பழத்தை வைத்து மூன்று முறை இடது மற்றும் வலது பக்கமாக சுற்றவும். பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு வெளியில் போட்டு கற்பூர கட்டி வைத்து எரிய விடவும். இவ்வாறு செய்வதினால் உங்களின் மீதும் உங்கள் வீட்டின் மீதும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி அனைத்தும் நெருப்பில் எரிந்து சாம்பலாகி விடும்.

Exit mobile version