Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

#image_title

இதை செய்தால் குலதெய்வம் ஓடி வந்து காப்பார்!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பது உறுதி!!

நமது குடும்பத்தை குலத்தை காக்கும் தெய்வம் தான் குலதெய்வம்.இஷ்ட தெய்வங்களுக்கு முன்னோடி நம் குலதெய்வம்.எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்க மறக்கக் கூடாது.

உங்கள் குலத்தை காக்கும் காவல் தெய்வமான குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறாரா என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் தான் இவை.

அடிக்கடி பல்லி சத்தம் இடுதல்,சம்மந்தமே இல்லாமல் வீட்டில் தெய்வீக மணம் வீசுதல்,உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த பொருட்களின் மணத்தை உணருதல் ஆகியவை உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்துகிறது.

குலதெய்வ கோயிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையை,பண அறை,பீரோ ஆகியவற்றில் வைக்கும் பொழுது அவை காயாமல் அழுகி போனால் உங்கள் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம்.அங்கு தெய்வீக சக்தி இல்லை என்று அர்த்தம்.

குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க செய்ய வேண்டிய பரிகாரம்:

உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு பித்தளை செம்பை வைத்து அதில் தண்ணீர் மற்றும் பன்னீர் சம அளவு ஊற்றவும்.

பிறகு அதில் பச்சை கற்பூரம்,வெட்டிவேர்,ஏலக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து செம்பில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு ஒரு மண் அகலில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும்.நிரந்தரமாக தங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

பின்னர் செம்பில் உள்ள தண்ணீரை வீடு முழுக்க தீர்த்தம் போல் தெளிக்கவும்.இவ்வாறு மாதம் ஒருமுறை குறிப்பாக அமாவாசை நாளில் செய்து வந்தால் குலதெய்வம் நிரந்தரமாக வீட்டில் வாசம் செய்வார்.

Exit mobile version