Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!

#image_title

இதை செய்தால் இனி எலி உங்க வீட்டுப் பக்கம் வரவே வராது!! அனுபவ உண்மை!!

நம் வீட்டில் டேரா போட்டு கொண்டு நம்மை ஆட்டி படைத்து வரும் எலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.இதற்காக ரசாயனங்கள் கலந்த உயிருக்கு ஆபத்தான மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தி ஒரே நாளில் அனைத்து எலிகளையும் எமலோகம் அனுப்பி விடலாம்.இதனால் நமக்கு ஒரு பிரச்சனை ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

*கோதுமை மாவு – 2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*ஷாம்பு – 1 தேக்கரண்டி

*நிலக்கடலை – 1 தேக்கரண்டி(கொரகொரப்பாக அரைத்து)

செய்முறை:-

1.ஒரு பவுலில் கோதுமை மாவு 2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.இந்த கோதுமை பொருட்களை எலிகள் விரும்பி உண்ணும்.நாம் செய்ய கூடிய எலி மருந்தை எலிகள்ன் உண்ண வேண்டும் என்பதற்காக கோதுமை மாவை சேர்த்து கொள்கிறோம்.

2.மிளகாய் தூள் 1 தேக்கரண்டி கோதுமை மாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.மிளகாய் தூள் கலந்த கலவையை எலிகள் உண்டால் அதன் வயிறு வீங்க தொடங்கி விடும்.

3.அதன் பின் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு வகைகளில் ஏதேனும் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்க வேண்டும்.கெமிக்கல் நிறைந்த ஷாம்பு உடலுக்குள் சென்றால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.எனவே இந்த ஷாம்பு கலந்த கலவையை எலிகள் உண்டால் அவை செத்து மடிய அதிக வாய்ப்பு இருக்கிறது.

4.நிலக்கடலை எலிக்கு மிகவும் பிடித்த பொருள்.எலிகளை கவர இந்த நிலக்கடலையை அந்த பவுலில் சேர்த்து எல்லா வற்றையும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

5.பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வீட்டில் எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.இப்படி செய்தோம் என்றால் எலிகள் அந்த கலவையை உண்டு விடும்.பின்னர் 2 அல்லது 3 மணி நேரத்தில் செத்து மடிந்து விடும்.

Exit mobile version