டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

0
119
#image_title

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று பருப்பு வடை.நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் இந்த வடை முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த சுவையான காரமான மசால் வடையை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*வடை பருப்பு – 1 கப்

*பச்சை மிளகாய் – 4
(அல்லது)
காய்ந்த மிளகாய்

*இஞ்சி – சிறு துண்டு

*உப்பு – தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 15 ( நறுக்கியது)

*கருவேப்பில்லை – 2 கோத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*சோம்பு – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – வடை செய்ய தேவையான் அளவு

செய்முறை:-

1.முதலில் வடை பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

2.பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊற வாய்த்த பருப்பு,சோம்பு,மிளகாய்,உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

3.பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் நறுக்கிய சின்ன வெங்காயம்,கருவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

4.அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். அவை சூடேறியதும் கலந்து வைத்துள்ள வடை பருப்பு மாவை சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.