Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முருகனுக்கு தொடர்ந்து 9 செவ்வாய் கிழமை இதை செய்தால் சொந்த வீடு அமையும்..!! கடன் தீரும்..!!

கடன் தொடர்பான எந்தவித பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான் தான். வீடு கட்டுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருப்பது, வீட்டினை முழுவதுமாக கட்டி முடிக்காமல் பாதியில் நிற்பது, நிலம் வாங்க முடியாமல் போவது, நிலம் தொடர்பான கோர்ட் வழக்குகள் இது போன்ற அனைத்திற்கும் காரணமாக இருப்பவரும் இந்த செவ்வாய் பகவான் தான்.

ஒருவருக்கு சொந்த வீடு, நிலம் ஆகியவை அமைய வேண்டும் என்றால், அதற்கு செவ்வாய் பகவான் முதலில் மனம் வைக்க வேண்டும். அவர் நினைத்தால் மட்டுமே நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முடியும். இந்த செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான் ஆவார்.

நமக்கு வேண்டிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் முருகப்பெருமான். வீடு, நிலம், பணம், படிப்பு, நல்ல தொழில் இது போன்ற அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் முருகப்பெருமான் ஆவார்.

எனவே செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானை நாம் வணங்கும் பொழுது நமக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். கிருத்திகை மற்றும் சஷ்டி ஆகிய நாட்கள் செவ்வாய் பகவானுக்கு உரிய நாட்களாகும். இவை இரண்டும் செவ்வாய் கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பு.

நமக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்றாலோ, கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றாலோ ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஒரு சிறிய பரிகாரத்தை செய்து வருவதன் மூலம், நாம் வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். இந்த பரிகாரத்தினை முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் செய்யும் பொழுது கண்டிப்பாக பலன் தரும்.

செவ்வாய் பகவானுக்கு உரிய துவரம் பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று சுக்கிர பகவானுக்கு உரிய அவரைக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்பது பல நன்மைகளை தரக்கூடிய சேர்க்கை ஆகும். எனவே இந்த இரண்டு தெய்வத்திற்கும் உரிய தானியங்களை ஒன்றாக சேர்த்து சமைத்து, அதில் நெய் ஊற்றி முருகப் பெருமானுக்கு நெய்வேத்தியம் ஆக வைக்க வேண்டும்.

முருகனை வழிபடுவதற்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. அந்த செவ்வாய்க்கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட முடியாவிட்டால், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் முருகனை வழிபாடு செய்து கொள்ளலாம்.

இந்த வழிபாட்டின் போது ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பினை சிவப்பு நிற துணியில் கட்டி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 வாரங்கள் செய்த பிறகு அந்த 9 துவரம் பருப்பு மூட்டையையும் எடுத்து தானமாக கொடுத்து விடலாம் அல்லது நாமும் சமைத்து உண்ணலாம்.

இந்த வழிபாட்டின் போது நமக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்றால் அது குறித்தும், கடன் தீர வேண்டும் என்றால் அது குறித்தும், நமக்கு வேண்டியவற்றை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் செய்து வரும்பொழுது கண்டிப்பாக நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

Exit mobile version