இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

0
186
#image_title

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

வீட்டில் ஐஸ்வர்யம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமையில் யாருக்கும் அரிசி, நெல், கோதுமை ஆகிய மூன்றையும் தனமாக தரக் கூடாது.

மற்ற நாட்களில் தானம் கொடுக்கும் போதும் நாம் வீட்டில் புழங்கும் அரிசியில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. தனியாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும்.

உங்கள் பிரச்சனைகள் தீர எதாவது பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் லெதர் செருப்பு, லெதர் பேக், லெதர் பர்ஸ் போன்ற பொருட்களுடன் செய்யாதீர்கள். அப்படி செய்தால் பரிகாரம் பலிக்காது.

கழுத்தை நெறிக்கும் கடன் உள்ளவர்கள் உங்களால் முடிந்த அளவு (கால் கிலோ, அரை கிலோ அல்லது ஒரு கிலோ) கொள்ளு வாங்கி தொடர்ந்து 16 நாட்கள் கோயிலுக்கு தானம் செய்யவும்.

குலதெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடை விடாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

வீட்டில் மருதாணி செடி அல்லது சிறிய நெல்லி மரம் வளர்ப்பது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொண்டு வந்து சேர்க்கும்.