காலையில் எழுந்ததும் இதை செய்தால் இனி சிரமமின்றி மலம் கழிக்கலாம்!!

0
919
If you do this when you wake up in the morning, you can pass stool easily!!

உடலில் உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற வேண்டியது அவசியம்.ஆனால் இன்றைய உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறியான வாழ்க்கை முறையால் பல பேர் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

இன்று உண்ணும் உணவுகளில் நார்ச்சத்து என்ற ஒன்று மிகவும் குறைந்துவிட்டது.நார்ச்சத்து இல்லாத மைதா,கொழுப்பு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.இதனால் உணவுக் கழிவுகள் மலக் குடலில் இறுகி வெளியேறாத நிலை உண்டாகிறது.நீங்கள் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை அலட்சியப்படுத்தினால் கூடிய விரைவில் பைல்ஸ் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

எனவே மலச்சிக்கலை போக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை தவிர்க்கமால் பின்பற்றவும்.

1)தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அருந்துவதை வழக்கமாக்கி கொண்டால் மலக் கழிவுகள் இளகி வெளியேறும்.

2)நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சிறந்த மலமிளக்கிய செயல்படுகிறது.

3)தினமும் ஒரு கீற்று பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

4)வெந்நீரில் சில துளிகள் விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் நாள்பட்ட மலக் கழிவுகள் முழுமையாக அடித்துக் கொண்டு வெளியேறும்.

5)தினமும் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

6)மலத்தை அடக்கி வைக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.மலம் கழிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.குறைவான நேரத்தில் மலக் கழிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.

7)உலர்ந்த திராட்சை அல்லது அத்தி பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.