Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

#image_title

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

இன்று மூட்டு வலி பாதிப்பால் அவதியடைபவரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய மூட்டு வலி பாதிப்பை ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த மூட்டு வலியை சட்டுனு விரட்டி அடிக்கும் தேங்காய் பால் பானம் தயார் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

1)உலர்ந்த தேங்காய் துண்டுகள்
2)கசகசா
3)சோம்பு
4)தேங்காய் பால்
5)நெய்

ஒரு கப் உலர்ந்த தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து காய விடவும். பிறகு 1/2 தேக்கரண்டி சோம்பு, 1/2 தேக்கரண்டி கசகசா சேர்த்து பொரிய விடவும்.

அதன் பிறகு அரைத்த தேங்காய் பால் சேர்க்கவும். இவை சூடாகும் பொழுது 2 அல்லது 3 உலர்ந்த தேங்காய் துண்டுகளை போட்டு கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இளஞ்சூட்டில் குடித்து வந்தால் மூட்டில் ஏற்படும் வலி, வீக்கம் விரைவில் குணமாகும்.

Exit mobile version