படம் பிடிக்கவில்லை என்றால் 60% டிக்கெட் பணம் ரிட்டர்ன்!! அதிரடி முடிவு..

0
149
If you don't like the movie, 60% of the ticket money will be returned!! Action result..

சமீப காலமாக “தியேட்டரில் வந்து படம் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையானது குறைந்து வருகிறது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன”. பணம் முன்கூட்டியே புக் செய்து படம் பார்ப்பவர்கள், படம் நன்றாக இல்லை என்றாலும், முகம் சுழித்தாவது அப்படத்தைப் பார்க்கின்றனர். ‘வேலை டிப்ரஷன் தாங்காமல் தான் படம் பார்க்க வருகின்றனர். படத்தைப் பார்த்தே டிப்ரஷன் ஆனால் என்ன செய்வது?’

இதற்குத்தான் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளது. இதன்படி ‘ஒரு படத்தை எவ்வளவு நேரம் பார்க்கிறார்களோ, அதற்குத் தகுந்தாற் போல் டிக்கெட்டின் விலை மாறுபடும்’. இந்த திட்டம் நாடு முழுவதும் கூடிய விரைவில் அமல்படுத்த உள்ளது.

“டிக்கெட் ரிசர்வ் செய்பவர்கள், டிக்கெட்டின் விலையில் 10% அதிகமாக கொடுக்க வேண்டும்”. ‘ஏ ஐ’ கேமரா மூலம் படம் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். ஏ.ஐயின் மூலம் ‘படம் பார்ப்பவர்கள் வருவது, போவது போன்ற விஷயங்கள் கவனித்து அவர்கள் டிக்கெட் கட்டணம் கணிக்கப்படும்’.

தியேட்டரில் படம் பார்க்கும் போது “படம் பிடிக்கவில்லை என்றால் அதிகபட்சமாக 60% கட்டணம் ரிட்டர்ன் பெற்று கொள்ளலாம்” . அதாவது “பாதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் மீதி 50% ரிட்டர்ன். பாதி படத்திற்கு மேல் வெளியே வந்தால் 20% முதல் 30% வரை பணம் திரும்ப பெறலாம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் மட்டுமே படம் பார்த்தால் 60% பணத்தை பெற்றுக் கொள்ளலாம்”. இந்தத் திட்டம் முதலில் பெரிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்படும். ‘பிவிஆர் ஐநாக்ஸ்’ தியேட்டரில் படம் பார்க்கும் வாடிக்கையாளருக்கு இது அதிரடி மகிழ்ச்சி அளித்துள்ளது. ‘ஆக மொத்தத்தில் எவ்வளவு நேரம் படம் பார்க்கிறோமோ, அதற்குரிய பணத்தை செலுத்தினால் போதுமானது’.