அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

0
207
#image_title

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும்.

தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)சின்ன வெங்காயம்
3)கொத்தமல்லி தழை
4)கறிவேப்பிலை
5)வெந்தயம்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 முதல் முதல் 10 வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும்.

அதன் பின்னர் 4 முதல் 5 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதேபோல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிளாஸ் அளவு பசு மோர் எடுத்து அதில் ஊறவைத்த வெந்தயம்,நறுக்கிய சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து குடிக்கவும்.இந்த மோர் உடலில் உள்ள சூட்டை முழுமையாக தணிக்கிறது.