குளிர்காலத்தில் இப்படி ஒரு டீயை போட்டு குடித்தால் கடும் குளிரையும் தாங்கலாம்! சளி இருமல் பக்கத்தில் வரவே வராது!

0
119

குளிர்காலத்தில் இப்படி ஒரு டீயை போட்டு குடித்தால் கடும் குளிரையும் தாங்கலாம்! சளி இருமல் பக்கத்தில் வரவே வராது!

குளிர்காலம் வந்தாலே சளி, இருமல், மூச்சுத்திணறல், இவை ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். இவை வராமல் தடுப்பதற்கும் நமது உடலானது கடும் குளிரையும் தாங்குவதற்கும் எப்பவும் குடிக்கும் தீயை விட இதுபோல் போல் ஒரு மூலிகை டீ தயாரித்து குடிக்கலாம். நிறைய பலன்கள் கிடைக்கும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும்.
இஞ்சி,பூண்டு இடிக்கும் கல்லில் தோல் நீக்கிய ஒரு துண்டு இஞ்சி,   2 ஏலக்காய், லவங்கப்பட்டை ஒரு துண்டு எடுத்து அதில் சேர்க்கவும். பிறகு ஐந்து மிளகு சேர்க்கவும். இறுதியாக மூன்று கிராம்பையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

இடித்த கலவையை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் போடவும். பிறகு அதில் ஐந்து துளசி இலைகளை நன்றாக கழுவி சேர்க்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இதில் ஒரு டம்ளர் காயவைத்த பசும்பால் சேர்க்கவும். பின் இனிப்புக்கு தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும். நன்கு கொதிந்ததும் இதை வடிகட்டி மூலம் ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும்.

பொதுவாக குளிர்காலத்தில் மாலை வேளைகளில் இந்த டீயை தயார் செய்து அருந்த வேண்டும். இதனால் நமது உடல் கடும் குளிரையும் தாங்குவதோடு, சளி இருமல் மற்றும் மூச்சு திணறலை குறைக்கும்.