இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!
பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்த குறட்டை பிரச்சனை இருக்கும்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் நம்மில் பலர் தூக்கத்தை தொலைத்திருப்போம்.உடல் பருமன் தான் குறட்டை ஏற்படுகிறது என்று அர்த்தம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை ஏற்பட காரணமாக இருக்கிறது.இந்த குறட்டை அசதி காரணமாகவும் ஏற்படும்.குறட்டை அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பு என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்ய முயலுங்கள்.இல்லையென்றால் பெரிய ஆபத்தில் கொண்டு சேர்த்து விடுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
தேவையான பொருட்கள்:-
*கருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
*கருப்பு மிளகு – 1/4 தேக்கரண்டி
*சீரகம் – 1/4 தேக்கரண்டி
*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
*இஞ்சி(துருவல்) – 1/4 தேக்கரண்டி
*உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:-
1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.
2.பின்னர் கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி,சீரகம் 1/4 தேக்கரண்டி சேர்க்கவும்.
3.பிறகு கருஞ்சீரகம்,கருப்பு மிளகு மற்றும் துருவி வைத்துள்ள இஞ்சி சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
4.அதன் பிறகு அடுப்பை அணைத்து அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதில் 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து எடுத்து வந்தால் குறட்டை பாதிப்பு விரைவில் நீங்கி விடும்.