இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!
சாதாரண சளி பாதிப்பை குணப்படுத்த தவறினால் அவை நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நாள்பட்ட நெஞ்சு சளி பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
*கற்பூரவல்லி இலை – 4
*பூண்டு பல் – 1
*கிராம்பு – 2
*ஏலக்காய் – 1
*மிளகு – 10
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*இஞ்சி – சின்ன துண்டு
*மஞ்சள் 1 சிட்டிகை அளவு
செய்முறை…
ஒரு மிக்ஸி ஜாரில் 4 கற்பூரவல்லி இலை, 1 ஏலக்காய், 2 கிராம்பு, 10 மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் துளசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
பின்னர் அரைத்த விழுதில் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்து தண்ணீர் சேர்த்து கலந்துள்ளவற்றை சேர்த்து கொள்ளவும்.
பிறகு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். அடுத்து 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகவும். இதை இரவு உணவு உண்ட பின்னர் தான் பருக வேண்டும். இவ்வாறு செய்தால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் ஒரு இரவில் கரைந்து வெளியேறி விடும்.