Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

#image_title

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

கண் பார்வை குறைபாட்டால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலையில் இன்றைய தலைமுறை உள்ளது.

இதற்கு முக்கிய காரணம்.. மொபைல், லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்களின் ஆதிக்கம் தான். கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆளி விதை
2)வால்நட்
3)முருங்கை பூ
4)பப்பாளி
5)வாழைப்பழம்
6)பால்

செய்முறை…

*ஒரு கப் முருங்கை பூவை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

*அடுப்பில் ஒரு வாணலி வைத்து காயவைத்த முருங்கை பூ சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

*அடுத்து 5 வால்நட், 2 தேக்கரண்டி ஆளி விதை போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

*வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

*பிறகு ஒரு கீற்று பப்பாளி பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*அதேபோல் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் ஊற்றவும். பிறகு அதில் வறுத்து அரைத்த பொடி 2 ஸ்பூன் சேர்க்கவும். இதனை தொடர்ந்து பப்பாளி கீற்று மற்றும் வாழைப்பழம் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

*இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி சாப்பிவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும். கண்ணாடி போடும் நிலை ஏற்படாது.

Exit mobile version