கடந்த காலங்களில் சிறுநீரக கல் பாதிப்பால் சிலர் மட்டுமே அவதிப்பட்டு வந்தனர்.ஆனால் தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நம் உடலில் உள்ள உப்புசத்தை வடிகட்டும் வேலையை செய்யும் சிறுநீரகம் அதில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.இவ்வாறு உள்ள நிலையில் தேவையற்ற உப்பு வெளியேறாமல் படியும் பொழுது அவை சிறுநீரக கற்களாக மாறுகிறது.இந்த சிறுநீரக கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
சிறுநீரக கற்களை கரைக்க சீரக பானம் பெரிதும் உதவுகிறது.சீரகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள்.
*முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
*பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
*அடுத்து வறுத்து வைத்துள்ள சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.சீரக நீர் ஒரு கப்பில் இருந்து அரை கப் அளவிற்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
*பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் பொழுது பருக வேண்டும்.இந்த சீராக பானம் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
1)சின்ன வெங்காயம் – மூன்று
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)கருப்பு மிளகு – ஐந்து
பயன்படுத்தும் முறை:
முதலில் மூன்று சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து எலுமிச்சம் பழத்தை நறுக்கி ஒரு தேக்கரண்டி அளவு சாறை அதில் பிழிந்துவிட வேண்டும்.
பிறகு ஐந்து மிளகை உரலில் போட்டு இடித்து தூள் சேர்த்து எலுமிச்சை சாறில் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து பருகினால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வந்துவிடும்.