நம் பாரம்பரிய மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகையாக சிறுபீளை உள்ளது.இது சிறுகண் பீளை,பொங்கல் பூ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
நம் பாரம்பரிய பண்டிகளில் ஒன்றாக காப்புக்கட்டு நாளில் இந்த சிறுகண் பீளையுடன் ஆவாரம் பூ,வேப்ப இலையை வைத்து கட்டி வீட்டை அலங்கரிப்பதால் இதை பொங்கல் பூ என்று அழைக்கின்றோம்.
இந்த பூ சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.நம் முன்னோர்கள் இந்த பூவை பயன்படுத்தியே சிறுநீரத்தில் உள்ள கற்களை கரைத்தனர்.
சிறுகண் பீளையானது தலைவலி,வயிறு வலி போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.வலி எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பவர்கள் சிறுகண் பீளையை மருந்தாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பூ இயற்கையாகவே சிறுநீரக கோளாறை சரி செய்யும் மருந்தாக திகழ்கிறது.சிறுகண் பீளை பூவை அரைத்து பசும் பாலில் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்துவிடும்.அதேபோல் சிறுநீரக கற்களை கரைக்கும் மேலும் ஒரு வைத்தியம் கீழே தரப்பட்டுள்ளது.
தேவைப்படும் பொருட்கள்:
1)சிறுபீளை பூ
2)சீரகம்
3)தண்ணீர்
தயாரிக்கும் முறை:
முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு சிறுபீளை பூவை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை உரலில் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அதன் பிறகு அரைத்த சிறுகண் பீளை விழுதை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.அதேபோல் சிறுகண் பீளை பூவை அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.