Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஜூஸ் 21 தினங்கள் பருகினால்.. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு குட்பாய் சொல்லிடலாம்!!

பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றான வெள்ளைப்படுதல் குணமாக இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

வெள்ளைப்படுதல் காரணங்கள்:-

1)சீரற்ற மாதவிடாய் பிரச்சனை
2)சிறுநீர்ப்பாதை நோய் தொற்று
3)மன அழுத்தம்
4)உடல் உஷ்ணம்
5)ஆரோக்கியம் இல்லாத உணவுகள்
6)பாலியல் சார்ந்த பாதிப்பு
7)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
8)நீரிழிவு நோய்
9)இரத்த சோகை
10)தூக்கமின்மை

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தகுந்த வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:

**சின்ன வெங்காயம் – இரண்டு
**வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
**பசும் பால் – ஒரு கிளாஸ்
**பனங்கற்கண்டு – சிறிதளவு
**சீரகம் – கால் டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*முதலில் சின்ன வெங்காயம் இரண்டு எடுத்து தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*அதன் பிறகு சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இவற்றையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த வெந்தயம் மற்றும் சீரகப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

*பிறகு இடித்த சின்ன வெங்காய சாறு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

*இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

**மலை நெல்லிக்காய் – இரண்டு
**சீரகம் – கால் டீஸ்பூன்
**தேன் – ஒரு டீஸ்பூன்
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

*இரண்டு மலை நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்ததாக மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கி வைத்துள்ள மலை நெல்லிகாயை போட வேண்டும்.

*பிறகு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையே இனி வருங்காலங்களில் ஏற்படாது.

Exit mobile version