இன்றைய நவீன காலகட்டத்தில் உடல் சோர்வு,மனச்சோர்வு,மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஆண்மை குறைபாடு,முன்கூட்டியே விந்து வெளியேறுதல்,மலட்டு தன்மை போன்ற பாதிப்புகளால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியற்ற ஒன்றாக மாறிவிடுகிறது.
இதற்கு நீங்கள் இயற்கை முறையில் தீர்வு காண விருப்பினால் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழம் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)காய்ச்சாத பால் – ஒரு கிளாஸ்
4)பிஸ்தா – பத்து
5)சாக்லேட் சிரப் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் சேர்க்கவும்.
அடுத்து ஒரு கிளாஸ் காய்ச்சாத பசும் பாலை அதில் ஊற்ற வேண்டும்.பின்னர் பத்து பிஸ்தா பருப்பை பொடியாக நறுக்கி வாழைப்பழத்தில் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சாக்லேட் சிரப் சேர்த்து ஸ்மூத்தி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் விந்து வெளியேற்றாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)பேரிச்சம் பழ விதை – 10
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் 10 பேரிச்சத்தின் விதைகளை நெயில் வறுத்து உரலில் இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளவும்.பால் ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள பேரிச்சம் பழ பொடியை போட்டு கொதிக்கவிட வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும்.இந்த பாலை குடித்துவிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடும் பொழுது விந்து முந்துதல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்