தினமும் ஊறவைத்த 5 பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? ஆனால் இவர்களெல்லாம் பாதாமை தவிர்க்க வேண்டும்!!
பொதுவாக உடலுக்கு ஆரோக்கியங்களை அள்ளி வழங்குவதில் உலர் விதைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.இதில் பெரும்பாலானோரின் விருப்ப உலர் என்றால் அவை பாதாம் தான்.பாதாமை அப்படியாகவும் சாப்பிடலாம்.ஊறவைத்து சாப்பிடலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது.பாதாம் பருப்பில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது.
ஊறவைத்த பாதாமில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
சருமப் பிரச்சனை,புற்று நோய் செல்களை அழிப்பது என்று உடலில் உள்ள பல பாதிப்புகளை இவை மருந்தாக செயல்படுகிறது.
ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
*உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
*இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும்.
*டல்லடிக்கும் முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.
*இரத்த அழுத்தம் கட்டப்படும்.
*முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
*கருப்பை தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.
*ஆண்மை குறைபாட்டை சரி செய்கிறது.
*மூளை நரம்புகள் பலப்படும்.ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு யார் சாப்பிடக் கூடாது?
பாதாமில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருந்தாலும் அவை சிலருக்கு தீமைகளை கொடுக்க கூடியவையாக மாறி விடுகிறது.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடக் கூடாது.
உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் பாதாமை சாப்பிடக் கூடாது.வயிறு உபாதைகள்,மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்ள கூடாது.