பெண்கள் பருவமடைந்த பிறகு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.தங்களின் கர்ப்ப காலத்தில் மட்டும் மாதவிடாய் சுழற்சி ஏற்படாது.மாதவிடாய் உதிரப்போக்கு அதிகபட்சம் 7 நாட்கள் வரை நீடிக்கும்.
ஆனால் சில பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாயை சந்திக்கின்றனர்.இந்த சீரற்ற மாதவிடாய்க்கு சீரகத்தில் தீர்வு இருக்கிறது.
தேவைப்படும் பொருட்கள்
1.சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
தயாரிக்கும் முறை
சீரகத்தை வைத்து மாதவிடாயை வரவழைக்கும் தேநீர் தயாரிப்பு முறை சொல்லப்பட்டுள்ளது.
முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு தீர்வு கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்
1)கருப்பு எள் – 50 கிராம்
2)வெல்லம் – 50 கிராம்
3)வேர்கடலை – 25 கிராம்
4)நெய் – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை
முதலில் அடுப்பில் வாணலி வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கருப்பு எள் 50 கிராம் அளவிற்கு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுத்தெடுக்கவும்.
பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடுங்கள்.அதன் பிறகு 25 கிராம் அளவிற்கு வேர்கடலையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இரண்டு பொருட்களையும் நன்கு ஆறவிடுங்கள்.
பிறகு பாத்திரம் ஒன்றில் 50 கிராம் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சவும்.பிறகு வறுத்த எள் மற்றும் வேர்க்கடலையை அதில் கொட்டி நன்றாக கிளறவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கையில் நெய் தடவிக் கொண்டு எள் உருண்டை பிடிக்கவும்.இதை தினம் 2 உருண்டை சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு தீர்வு கிடைக்கும்.