இந்த இலை சாறு ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. ஒரு நிமிடத்தில் நெஞ்சு சளி கரைந்துவிடும்!!

0
103
If you eat a spoonful of this leaf juice.. chest mucus will dissolve in a minute!!

சளி,இருமல் போன்ற மழைக்கால நோய்களை அடித்து விரட்டும் மூலிகை பானம் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பானத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)கிராம்பு
3)கருப்பு மிளகு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு பெரிய சைஸ் வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

2.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

3.பிறகு உரல் அல்லது மிக்ஸி ஜாரை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு நறுக்கிய வெற்றிலையை போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிடவும்.

4.அடுத்து இரண்டு கிராம்பு அதாவது இலவங்கம் மற்றும் நான்கு கருப்பு

மிளகை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் தனித்தனியாக இடித்துக் கொள்ளுங்கள்.

5.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்த வெற்றிலை,இலவங்கம் மற்றும் மிளகை போட்டு ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

6.பிறகு அடுப்பை அணைத்து ஒரு தட்டு போட்டு ஐந்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தயாரித்து வைத்துள்ள பானத்தை வடிகட்டி குடிக்கவும்.

இப்படி தினமும் மூன்று வேளை என்று மூன்று தினங்களுக்கு குடித்து வந்தால் சளி,இருமல் அனைத்தும் குணமாகும்.குழந்தைகளுக்கு 10 மில்லி அளவு இந்த பானம் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு இந்த பானம் தயாரிக்கிறீர்கள் என்றால் இரண்டு மிளகு மட்டும் சேர்த்துக் கொள்வது நல்லது.சிலருக்கு தேன் அலர்ஜியாக இருக்கலாம்.அவர்கள் தேன் சேர்த்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.