இன்று ஆண்,பெண் அனைவரும் குறட்டை பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள இயற்கை வைத்தியத்தை செய்து வாருங்கள்.
குறட்டை வரக் காரணங்கள்:
*சைனஸ்
*மூக்கடைப்பு
*உடல் பருமன்
*சுவாசப்பாதை பிரச்சனை
*புகை மற்றும் மது பழக்கம்
*நீர்ச்சத்து குறைபாடு
*தொண்டையில் பிரச்சனை
*சளி தொந்தரவு
தேவையான பொருட்கள்:-
1)வல்லாரை கீரை – கால் கப்
2)தண்ணீர் – 30 மில்லி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதல் படி:
கால் கப் அளவிற்கு வல்லாரை கீரை எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யுங்கள்.
இரண்டாவது படி:
வல்லாரை கீரையை மிக்சர் ஜாரில் போட்டு 30 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்திடுங்கள்.பிறகு இந்த வல்லாரை சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்றாவது படி:
பிறகு இந்த வல்லாரை சாறில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த வல்லாரை சாறை தொடர்ந்து பருகி வந்தால் குறட்டை பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
குறட்டைக்கு மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)நாட்டு பூண்டு பல் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதல் படி:
ஒரு பல் நாட்டு பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது படி:
பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
மூன்றாவது படி:
விளக்கெண்ணெய் சிறிது சூடானதும் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு சூடாக்குங்கள்.பிறகு இந்த எண்ணெயை ஆறவைத்து ஒரு சிறிய பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளுங்கால்.
தூங்குவதற்கு முன்னர் இந்த பூண்டு எண்ணெய் மூன்று சொட்டு அளவு மூக்கின் துவாரத்தில் விட வேண்டும்.இப்படி செய்தால் குறட்டை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதல் படி:
ஒரு ஏலக்காயை மிக்சர் ஜார் அல்லது உரலில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி விடுங்கள்.
இரண்டாவது படி:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.இதை ஏலக்காய் தூளில் போட்டு மிக்ஸ் செய்து பருகுங்கள்.இதை தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால் குறட்டை வருவது முழுமையாக கட்டுப்படும்.