இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!

0
79

இன்றைய காலத்தில் உலர் பழங்களை விருப்புபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.திராட்சை,அத்தி,பேரிச்சம் பழம்,கிவி போன்றவற்றை பால்,தேன் மற்றும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் தேக ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

உலர் பழங்களில் பேரிச்சம் பழம் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

பேரிச்சம் பழ விதை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.சுவை மிகுந்த பேரிச்சம் பழத்தை குளிர் காலத்தில் உண்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.வைட்டமின்க,நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படும் பேரிச்சம் பழத்தை குளிர் காலத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

 

குளிர் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வு நீங்க பாலில் பேரிச்சம் பழம் சேர்த்து கொதிக்க வைத்து பருக வேண்டும்.இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பேரிச்சம் பழம் அருமருந்தாக திகழ்கிறது.குளிர்காலத்தில் மலச்சிக்கல் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் பேரிச்சம் பழத்தை கொதிக்க வைத்து பருகலாம்.

 

உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பேரிச்சம் பழத்தின் விதையை நீக்கிவிட்டு அதில் நெய் கலந்து சாப்பிடலாம்.அதேபோல் பேரிச்சம் பழத்தை அரைத்து சூடான பாலில் கலந்து இதனுடன் தேன் சேர்த்து பருகினால் இயற்கையான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.

 

பேரிச்சம் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று அதை அதிகமாக உட்கொண்டால் எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.தினம் ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.